உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை ஆயுதப்படை போலீசார் அசத்தல்

சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை ஆயுதப்படை போலீசார் அசத்தல்

கோவை: சுதந்திர தின அணிவகுப்புக்கு தயாராகும் விதமாக, மாநகர ஆயுத படை போலீசார் நேற்று ஒத்திகை நடத்தினர்.நாட்டின் சுதந்திர தினம், வரும் 15ம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்தாண்டு கோவை மாநகர போலீசார் சார்பில், சுதந்திர உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வ.உ.சி., மைதானத்தில், தேசிய கொடியுடன் அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கென, மாநகர ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதப்படை போலீஸ் உதவி கமிஷனர் சேகர் முன்னிலையில், அணிவகுப்பு ஒத்திகையில் போலீசார் நேற்று ஈடுபட்டனர்.இதில், 18 பெண் போலீசாரும், 18 ஆண் போலீசாரும் இணைந்து நடத்திய ஒத்திகை, பஞ்சாப் மாநிலம், இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகா நுழைவு வாயிலில், நமது எல்லை பாதுகாப்பு படையினரின் அணிவகுப்புக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.வரும், 13ம் தேதி இறுதி ஒத்திகை நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை