உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை புத்தகத் திருவிழாவில் இன்று இன்னிசை பட்டி மன்றம்

கோவை புத்தகத் திருவிழாவில் இன்று இன்னிசை பட்டி மன்றம்

கோவை : கோவை புத்தகத் திருவிழாவில் இன்று கண்ணதாசனின் பாடல்கள் குறித்த இன்னிசை பட்டிமன்றம் நடக்கிறது.கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2024 கடந்த ஜூலை 19 முதல் நடக்கிறது. கண்காட்சியில் புத்தகங்கள் மட்டுமின்றி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் அறிவு சார்ந்த அறிவு கேணி நிகழ்ச்சிகளும், மாலையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என நாள் முழுக்க நிகழ்வுகள் உள்ளன. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகளும் பேச்சுப்போட்டிகளும் நடந் தன. கவியரங்கம் பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. நாடகம், நடனம் என தினமும் வெவ்வேறு நிகழ்வாக இருப்பதால் பலரும் ஒவ்வொரு நாளும் கண்காட்சிக்கு சென்று புதிய விஷயங்களை அறிந்து வருகின்றனர்.கண்காட்சி காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடக்கிறது அனுமதி இலவசம். நேற்று கோடீஸ்வரனின் சுதந்திர தீபங்கள் நாடகம் நடந்தது. மாலையில் கொங்கு நாட்டு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்தன.

இன்று பட்டிமன்றம்

கல்லூரி மாணவர்களுக்கான தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டிகள் நடக்கின்றன. ரோட்டரி கிளப் ஆப் சேஞ்ச் மேக்கர் சிறுகதை போட்டி குறும்பட போட்டி பரிசளிப்பு விழா நடக்கிறது . இன்று மாலை 6.30 மணிக்கு கவியரசு கண்ணதாசனின் இன்னிசை பட்டிமன்றம் நடக்கிறது.நடுவராக மரபின் மைந்தன் முத்தையா தலைமை வைக்கிறார். 'கவியரசு கண்ணதாசன் படைப்புகளிலும் பாடல்களிலும் பெரிதும் ஓங்கி இருப்பது, அற்புத கற்பனையே அனுபவ முத்திரையே, ' இந்த தலைப்பில் பட்டி மன்றம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை