உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் ஆய்வு

பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் ஆய்வு

பெ.நா.பாளையம்:இடிகரை பேரூராட்சியில், அரசின் பல்வேறு திட்டங்கள், அது தொடர்பாக செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள பாலங்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள், சாலைகள் உள்ளிட்டவைகளை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் மலையமான் திருமுடி காரி பார்வையிட்டார்.சுற்றுப்புற சூழல் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து, ஆலோசனைகளை வழங்கி, குப்பை இல்லாத பேரூராட்சியாக மாற்றக்கூடிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, அறிவுரை வழங்கினார்.தொடர்ந்து, பெரிய நாயக்கன்பாளையம் பேரூராட்சியில், குப்பிச்சிபாளையத்தில் உள்ள உரக்கிடங்கு, கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம், திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகம், பெண்களின் வாழ்வாதாரத்துக்கான சுய உதவி குழு தொழில் பிரிவு, மியாவாக்கி தோட்டங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ