உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருநங்கையர் கல்வி உதவி விண்ணப்பிக்க அழைப்பு

திருநங்கையர் கல்வி உதவி விண்ணப்பிக்க அழைப்பு

உடுமலை: உயர்கல்வி கற்கும் திருநங்கைகள், திருநம்பிகளின் கல்வி மற்றும் இதர கட்டணங்களை முழுமையாக அரசே ஏற்கும் திட்டம், நடப்பு 2024 - 25 நிதியாண்டுமுதல் செயல்படுத்தப்படுகிறது.திருநங்கைகள் நலவாரியத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்துள்ள, உயர்கல்வி கற்கும் அனைத்து திருநங்கைகள், திருநம்பிகளும் கல்வி உதவித்தொகை பெறலாம். வருமான வரி உச்ச வரம்பு ஏதுமின்றி, பிற உதவித்தொகைகள் ஏதேனும் பெற்றுவந்தாலும், இந்த திட்டத்தில் பயன்பெறலாம். வேறு துறைகள் வாயிலாக, கல்வி உதவித்தொகை பெற்றிருப்பின், அந்த தொகை தவிர, மீத தொகையை இந்த திட்டத்தில் பெறலாம்.திருப்பூர் மாவட்டத்தில் உயர்கல்வி கற்கும் திருநங்கை, திருநம்பிகள், உரிய ஆவணங்களுடன், திருப்பூர் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் இயங்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி, உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை