உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கட்சி விசுவாசிகளை ஒதுக்கும் புகார் சரியா? கோவை மேயர் தேர்வின் பின்னணி இதோ

கட்சி விசுவாசிகளை ஒதுக்கும் புகார் சரியா? கோவை மேயர் தேர்வின் பின்னணி இதோ

கோவை;கோவை மாநகராட்சியில் காலியாக இருந்த மேயர் பதவியை கைப்பற்ற, மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் மற்றும் சீனியர் கவுன்சிலர்கள் பலரும் முயற்சித்தனர்.அமைச்சர்கள் நேரு, முத்துசாமி, டி.ஆர்.பி.ராஜா மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, எம்.பி., ராஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் உள்ளிட்டோர் மூலமாக பரிந்துரைக்கப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்களின் செயல்பாடுகள் குறித்து, உளவுத்துறை போலீசார் மூலம் 'ரிப்போர்ட்' பெறப்பட்டது.இறுதியாக, சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பரிந்துரைப்படி, முதல்முறை கவுன்சிலர் ரங்கநாயகி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது, சீனியர் கவுன்சிலர்கள் மற்றும் கட்சிக்காக பரம்பரை பரம்பரையாக உழைத்து வரும் விசுவாசிகள், கடுமையான அதிருப்திக்கு உள்ளாகினர்.ஏமாற்றத்தை தாங்க முடியாத மண்டல தலைவர் மீனா, பணிகள் குழு தலைவர் சாந்தி ஆகியோர், அமைச்சர்கள் நேரு, முத்துசாமி முன்னிலையில் ஆதங்கத்தை கொட்டினர்.சீனியர்களையும், கட்சிக்காக ஓடாய் உழைத்தவர்களையும் ஓரங்கட்டி விட்டு, ஜூனியர்களுக்கு பதவியை வாரி வழங்குவதுதான், திராவிட மாடலா என்கிற விமர்சனம் எழுந்திருக்கிறது.இதுதொடர்பாக, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:மேயர் தேர்வு நடைமுறை தொடர்பாக, மாநகராட்சி உயரதிகாரிகளிடம் கட்சித்தலைமை ஆலோசித்தது. அப்போது, மண்டல தலைவர்கள் மற்றும் நிலைக்குழு தலைவர்களில் இருந்து யாரேனும் ஒருவரை மேயராக தேர்வு செய்தால், காலியாகும் இப்பதவிகளுக்கு மீண்டும் ஒரு முறை, மறைமுகத் தேர்தல் நடத்த வேண்டுமென கூறினர்.பதவிக்காக கவுன்சிலர்கள் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கும் சூழல் தொடர்வதை தவிர்க்க, கவுன்சிலர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க முடிவெடுக்கப்பட்டது.இதில், ஒரு சமுதாயத்திடம் இருந்த பதவியை பறித்து, இன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்தவரிடம் வழங்கினால், அதிருப்தி அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்கிற, வாதம் முன்வைக்கப்பட்டது. அதனால் அதே சமுதாயத்தை சேர்ந்தவருக்கு, பதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது.கூடுதலாக, முன்னாள் மேயர் சார்ந்த அதே மண்டலத்தில் இருந்து தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 29வது வார்டு ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டார்.இவர், வட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் மனைவி. தி.மு.க.,விலும் அடிமட்ட நிர்வாகிகளுக்கு உயர் பதவி கிடைக்கும் என்ற எண்ணத்தை தொண்டர்களிடம் சேர்ப்பிக்க, இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது, மற்றவர்களுக்கு சங்கடம், ஆதங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை