உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளநிலை உதவியாளர் பணி; பள்ளி அலுவலர்களுக்கு வாய்ப்பு

இளநிலை உதவியாளர் பணி; பள்ளி அலுவலர்களுக்கு வாய்ப்பு

பொள்ளாச்சி : சென்னை, ராஜ்பவன், கவர்னர் மாளிகை அலுவலகத்தில் இருந்து, 4 இளநிலை உதவியாளர் பணியிடங்களை மாறுதல் வாயிலாக நிரப்பப்படவுள்ளது. அரசு பள்ளிகளில் பணிபுரியும் தகுதியான அலுவலர்கள், இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இருந்தும் விருப்பம் உள்ள பணியாளர்கள் விபரம் கோரப்பட்டது. அதற்கு, பெரும்பாலானவர்கள் விருப்பம் இல்லை என, தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும், பள்ளிகளில் பணிபுரியும் விருப்பமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் குறித்த விபரம் கோரப்பட்டது.விருப்பம் உள்ளவர்கள், கூகுள் சீட்டில் பதிவு செய்து, விருப்பக் கடிதம் மற்றும் கல்விச் சான்றுகளை, இன்று காலை, 11:30 மணிக்குள், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில், ஆங்கிலம் டைப்ரைட்டிங் லோயர் தேர்ச்சி பெற்ற விபரமும் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி