உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காமராஜர் பிறந்தநாள் விழா கருத்தரங்கு

காமராஜர் பிறந்தநாள் விழா கருத்தரங்கு

தொண்டாமுத்தூர்:காமராஜர் பிறந்த நாள் விழா, பச்சாபாளையத்தில் நேற்று நடந்தது. இவ்விழாவில், ஆசிரியர் நந்தினி வரவேற்புரையாற்றினார். கல்வி துணை அறக்கட்டளை நிறுவனர் சிவசாமி தலைமை வகித்தார். கல்வியின் முக்கியத்துவம் குறித்து, தன்னம்பிக்கை பேச்சாளர் சுஜாதா எடுத்துரைத்தார். தொடர்ந்து, காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்துரையாடினார். ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கார்த்திகேயன், பெற்றோர்களுக்கு மாணவர்களிடம் உள்ள எதிர்பார்ப்பும், மாணவர்களுக்கு பெற்றோர்களிடம் உள்ள எதிர்பார்ப்பு குறித்தும் விளக்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாரதியார் பல்கலை., முன்னாள் துணைவேந்தர் இளங்கோ, 'கல்வியின் அடையாளம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ