| ADDED : ஜூலை 26, 2024 10:55 PM
கோவை:கார்கில் போரின், 25வது நினைவு நாளையொட்டி மெட்ராஸ் ரெஜிமென்ட், 110 பிரதேச ராணுவப் படையின் புலியகுளம் யூனிட் வளாகத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.காஷ்மீர் மாநிலத்திற்கு உட்பட்ட கார்கில் என்ற இடத்தில் கடந்த, 1999ம் ஆண்டு பாக்., ராணுவம் அத்துமீறி நுழைந்தது. கடும் பனிப்பொழிவில் நடந்த இந்த போரில், நம் நாட்டு ராணுவ வீரர்கள், பாகிஸ்தான் படையினரை விரட்டி அடித்தனர்.இந்தியா வெற்றி பெற்ற நிலையில், ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் வீரமரணம் அடைந்தனர். இதனை நினைவுகூரும் வகையில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு ஆண்டுதோறும், வீரவணக்கம் செலுத்திவருகிறோம்.கார்கில் போரின், 25வது நினைவு நாளான நேற்று மெட்ராஸ் ரெஜிமென்ட், 110 பிரதேச ராணுவப் படையின் புலியகுளம் யூனிட் வளாகத்தில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு, மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.மெட்ராஸ் ரெஜிமென்ட், 110 பிரதேச ராணுவப் படையின் கமாண்டிங் ஆபிசர் கர்னல் ஹரிஸ் தலைமையில், 150, ராணுவ வீரர்கள், 40, முன்னாள் ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.