உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேந்திரிய வித்யாலயா தடகளம்; மாணவியர் அபாரம்

கேந்திரிய வித்யாலயா தடகளம்; மாணவியர் அபாரம்

கோவை;கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான தடகளப்போட்டியில், மாணவியர் தங்களின் முழுத்திறமையையும் வெளிப்படுத்தினர். கோவை நேரு ஸ்டேடியத்தில், கேந்திரிய வித்யாலயா சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு, இடையே தடகளப்போட்டிகள் நடந்தன. மாணவியருக்கு 14, 17, 19 ஆகிய வயது பிரிவுகளில் நடத்தப்படும் போட்டில் 38 பள்ளிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். 100மீ., 200மீ., 400மீ., 800மீ., தடைதாண்டும் ஓட்டம், தொடர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஹேமர் த்ரோ உள்ளிட்ட பல்வேறு தடகளப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

நேற்று நடந்த போட்டி முடிவுகள்

14 வயது பிரிவு வட்டு எறிதலில், துருவி சிரோதியா (தாம்பரம்), பரிதி பாண்டே (தாம்பரம்) ஆலின் (ஆவடி); தடை தாண்டும் ஓட்டத்தில் தியா (சூலுார்), கீர்த்திகா (விருதுநகர்), ஹேமா தர்சினி (ஆவடி); 400மீ., ஓட்டத்தில் கார்த்திகா (கோல்டன் ராக்), ஆர்லீன் ஜெனிடா (கோவை), பெனிடா சாரோன் (அருவங்காடு); 100மீ., ஓட்டத்தில் சுவிதா (ஜிப்மர்) ஆர்லீன் ஜெனிடா (கோவை), கிருத்திகா (ஜிம்பர்) ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 17 வயது பிரிவு நீளம் தாண்டுதலில் ரச்சிகா (தாம்பரம்), கிரிஷ்மா (ஆவடி), அனுஷா (தாம்பரம்); உயரம் தாண்டுதலில் தீக்ஷா (கோவை), சோனியா (சூலுார்); தடை தாண்டும் ஓட்டத்தில் தீக்ஷா (கோவை), தீபிகா (மதுரை), நேகா (சூலுார்) முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 19 வயது பிரிவு மும்முறை தாண்டுதலில், சாரல் பாரதி (காரைக்குடி), கிரேஸி (சூலுார்), அனு பிரியா (திருச்சி); குண்டு எறிதலில் கோபிகா (நாகர்கோயில்), மதுமதி (தாம்பரம்), ஓவிய பிரியா (கோவை); 100மீ., ஓட்டத்தில் தர்சினி (தாம்பரம்), மீனலோசினி (மதுரை), ஜெயா ரேஸ்னி (பெரம்பலுார்) ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி