உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.ஜி. கேன்சர் ஆராய்ச்சி மையம் டாடா சன்ஸ் தலைவர் அடிக்கல்

கே.ஜி. கேன்சர் ஆராய்ச்சி மையம் டாடா சன்ஸ் தலைவர் அடிக்கல்

கோவை:கோவை சரவணம்பட்டி கே.ஜி.ஐ.எஸ்.எல்., வளாகத்தில், கே.ஜி.புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு, டாடா சன்ஸ் தலைவர் அடிக்கல் நாட்டினார்.கே.ஜி.அறக்கட்டளையின் நுாற்றாண்டு மற்றும் கே.ஜி.மருத்துவமனையின், 50 ஆண்டு விழாவையொட்டி, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டினார்.இம்மையம், ரூ.300 கோடி முதலீட்டில் நிறுவப்பட உள்ளது. பெட் சி.டி., அறுவைசிகிச்சை புற்றுநோயியல், கதிர்வீச்சு புற்றுநோயியல் மற்றும் மருத்துவ புற்றுநோயியல் உள்ளிட்ட நவீன கதிர்வீச்சு புற்றுநோயியல் கருவிகளுடன் கூடிய, 100 படுக்கை வசதிகளுடன் மையம் உருவாக்கப்பட உள்ளது.நிகழ்ச்சியில், டாடா சன்ஸ் தலைவர் ஸ்ரீ நடராஜன் சந்திரசேகரன் பேசுகையில், ''இந்தியாவில், 5 லட்சம் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. 1,700 பேருக்கு ஒரு டாக்டரே உள்ளனர். வடகிழக்கு பகுதியில் அடிப்படை மருத்துவம் பெற, 20 கி.மீ, துாரம் பயணிக்க வேண்டியுள்ளது. ஒருவர் நீண்ட நாட்கள் வாழ்ந்தால் போதாது; ஆரோக்கியமாக வாழ வேண்டும்,'' என்றார். கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம் கூறுகையில், “புதிதாக துவங்கவுள்ள மையம், புற்றுநோய் சிகிச்சையில் சிறந்து விளங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kundalakesi
ஜூலை 28, 2024 07:37

புற்று நோய் பெருக்கத்தை தான் இது காட்டுகிறது. மக்கள் பெரும்பாலானோர் முறையான காப்பீடு இல்லாமல் உள்ளனர்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை