| ADDED : ஆக 14, 2024 12:40 AM
கோவை;கோவை பெரியகடைவீதியில் உள்ள பூம்புகார் கைவினைப் பொருட்கள் அங்காடியில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, 'கிருஷ்ண தரிசனம்' கண்காட்சி நடக்கிறது.பூம்புகார் நிறுவனத்தின் மேலாளர் ஆனந்தன் கூறியதாவது:இந்த கண்காட்சியில் கிருஷ்ணரின் திருவுருவம் கொண்ட பஞ்சலோகம், பித்தளை, சந்தனமரம், கருப்பு மற்றும் வெள்ளை உலோக சிலைகள், தஞ்சை ஓவியங்கள். காகிதக்கூழ், களிமண் பொம்மைகள், கொண்டபள்ளி பொம்மைகள், நுாக்கமர உட்பதிப்பு வேலைப்பாடு, துணியில் வரைந்த ஓவியங்கள் மற்றும் ஏராளமான பொருட்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.இந்த கைவினைப் பொருட்களை, மக்கள் வாங்கி பயன்படுத்துவதன் வாயிலாக, இந்த பொருட்களை உற்பத்தி செய்யும் கைவினைஞர்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.இவ்வாறு, அவர் கூறினார்.வரும் 31ம் தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சி, தினசரி காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது.