உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணத்துடன் பையை ஒப்படைத்த டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டு

பணத்துடன் பையை ஒப்படைத்த டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டு

கோவை;கோவை மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தின் கருமத்தம்பட்டி கிளையில் இருந்து இயக்கப்படும், 20ஏ எண்ணுள்ள சோமனுார் - காந்திபுரம் வழித்தட அரசு பஸ்சில் (எண்: டி.என். 38 என் 3524), டிரைவராக விஜயகுமார், கண்டக்டராக முருகன் ஆகியோர் பணிபுரிந்தனர்.ஒரு பெண் பயணி, தனது பேக்கை தவற விட்டுச் சென்றிருக்கிறார். அதை பத்திரப்படுத்திய டிரைவரும், கண்டக்டரும் சேர்ந்து, அப்பயணியை கண்டுபிடித்து, அவரிடம் சேர்ப்பித்தனர். அதில், 20 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தார். பணமும், பேக்கும் திரும்ப கிடைத்ததும் மகிழ்ச்சி அடைந்து, நன்றி தெரிவித்தார்.பயணிகள் மத்தியில், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்துக்கும், ஊழியர்களுக்கும் பெருமை சேரும் வகையில் செயல்பட்ட கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு, போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஜோசப் டயஸ் பாராட்டு தெரிவித்தார். பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை