உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதுபான கடையில் ரூ. 5 லட்சம் திருட்டு

மதுபான கடையில் ரூ. 5 லட்சம் திருட்டு

பெ.நா.பாளையம், : பெரியநாயக்கன்பாளையம் அருகே மதுபான கடையில், 5 லட்ச ரூபாய் திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில் எப்.எல்., 2 தனியார் மதுபான கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு அங்கு வேலை பார்க்கும், 3 ஊழியர்கள் கடைக்கு மேல் உள்ள அறையில் உறங்க சென்று விட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது, மதுபான கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே வைக்கப்பட்டிருந்த, 5 லட்சத்து, 43 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு இருந்தது. கடை ஊழியர் கார்த்திக் கொடுத்த புகாரில், பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பணத்தை திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி