உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவோயிஸ்ட் நடமாட்டம்; வனத்துறையினர் ஆய்வு

மாவோயிஸ்ட் நடமாட்டம்; வனத்துறையினர் ஆய்வு

பெ.நா.பாளையம் : மாவோயிஸ்ட் மற்றும் கள்ளச்சாராயம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் தமிழக, கேரளா எல்லை பகுதிகளில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.மேட்டுப்பாளையம் -கோத்தகிரி ரோட்டில் மலைப்பாதை தடுப்பு சுவரில் இந்திய இறையாண்மைக்கு எதிராக 'இந்தியா ஒழிக' என, எழுதி இருந்தது. இச்சம்பவத்தின் எதிரொலியாக தமிழக, கேரள மாநில எல்லையை ஒட்டிய காரமடை வனப்பகுதியில் நேற்று முன்தினம் கியூ பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.நேற்று பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சரவணன் மற்றும் வனத்துறையினர் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட தமிழக, கேரள எல்லை பகுதியான ஆனைகட்டி, கோபநாரி, கூடப்பட்டி, எழுத்துக்கல்புதூர் பவானி ஆற்று கரையோர பகுதிகளில் நக்சல், மாவோயிஸ்ட் மற்றும் கள்ளச்சாராயம் குறித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும், பொது மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதி பொதுமக்களிடம், புதிய நபர்கள்நடமாட்டம் உள்ளதா எனவும், இருந்தால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ