உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிழல் தரும் மரங்கள் பெருகட்டும்.. பழம் தரும் மரங்கள் செழிக்கட்டும்

நிழல் தரும் மரங்கள் பெருகட்டும்.. பழம் தரும் மரங்கள் செழிக்கட்டும்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, கோதவாடியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில், நடவு செய்ய மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது.கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதத்துக்கு முன், ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கும் மரம் வளர்க்க ஒவ்வொரு மரக்கன்று வழங்கப்பட்டது.இதை தொடர்ந்து, தற்போது ஊராட்சியில் மீண்டும் மரக்கன்று நடவு செய்ய திட்டமிடப்பட்டு, அதற்காக பூவன், கொன்றை, புங்கன் போன்ற நிழல் தரும் மரக்கன்றுகளும், கொய்யா நெல்லி, நாவல் போன்ற பழ வகை மரக்கன்றுகளும், மருத்துவ குணம் உடைய நொச்சியும் தயார் நிலையில் உள்ளது.கோதவாடி ஊராட்சியில், பல இடங்களில் இந்த மரக்கன்றுகள் நடவு செய்யப்படும். பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. பசுமையான ஊராட்சியை உருவாக்கவும், மாசு இல்லாத கிராமமாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என, ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை