| ADDED : ஜூன் 12, 2024 10:19 PM
நெகமம் : நெகமம், மெட்டுவாவியில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.கால்நடைகளுக்கு, கால்நடை மருத்துவர், ஆய்வாளர் மற்றும் உதவியாளர் கொண்ட குழு வாயிலாக, கோமாரி நோய் தடுப்பூசி, போடப்பட்டு வருகிறது. இதில், நெகமம், மெட்டுவாவி மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு, கடந்த 10ம் முதல் கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில், 4 மாத கன்று முதல் மாட்டுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.இதுகுறித்து, கால்நடை மருத்துவர் கார்த்திகேயன் கூறுகையில், ''மெட்டுவாவி மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு, 5ம் கட்ட கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. இப்பகுதியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளது.தற்போது வரை, 300 மாடுகளுக்கு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், கால்நடை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, பராமரிக்கும் முறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி, விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது,'' என்றார்.