உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதுமையில் ஞாபக மறதி ஆயுர்வேதத்தில் இருக்கு தீர்வு

முதுமையில் ஞாபக மறதி ஆயுர்வேதத்தில் இருக்கு தீர்வு

வயது அதிகரிக்கும் போது மறதியும் அதிகரிக்கிறது. ஆயுர்வேதத்தில் இதற்கு தீர்வு இருக்கிறது என்கிறார், டாக்டர் சிவக்குமார்.அவர் கூறியதாவது:முதுமையில் ஏற்படும் மறதிக்கு, வயது காரணமாக இருந்தாலும், குடும்பமும் ஒரு காரணமாக இருக்கிறது. முதுமை காலத்தில் முதியவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவர்களே முடிவு எடுக்க விடவேண்டும்.அவர்களிடம் எதையும் திணிக்க கூடாது. இதை தடுப்பதால் அவர்களுக்கு மன ரீதியாக பிரச்னை ஏற்பட்டு மறதி ஏற்படுகிறது. முக்கியமாக அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரவேண்டும்.50 வயதிற்கு பின் சர்க்கரை நோய், மூட்டு வாதம், முடக்கு வாதம், இடுப்பு வலி, கழுத்து வலி போன்ற பிரச்னையால் மறதி ஏற்படும். இதனை ஆயுர்வேத சிகிச்சை வாயிலாக குணப்படுத்தலாம். பெரும்பாலும் முதியவர்களுக்கு, சிறு வயதில் நிகழ்ந்த சம்பவங்கள் நினைவில் இருக்கும்.ஆனால் தற்போது நடக்கும், எதுவும் ஞாபகம் இருக்காது. காலையில் சாப்பிட்டதை கேட்டால் கூட தெரியாது. இதற்கு மருந்தை விட சிறந்தது குடும்பம் தான்.வீட்டில் உள்ள முதியவர்களிடம் அதிகம் பேச வேண்டும். அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும். மறதியை, 60 சதவீதம் சிகிச்சையாலும், 90 சதவீதம் குடும்பத்தினராலும்தான் குணப்படுத்த முடியும்.இதை தவிர்த்து ஏற்படும் பிற மறதி நோய்களை, ஆயுர்வேத கிசிச்சையில் குணப்படுத்தி விடலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி