உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுல்தான்பேட்டையில் 220 எக்டரில் நுண்ணீர் பாசனம்

சுல்தான்பேட்டையில் 220 எக்டரில் நுண்ணீர் பாசனம்

சூலூர் : சுல்தான்பேட்டை வட்டாரத்தில்,220 எக்டரில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் கூறியதாவது:சுல்தான்பேட்டை வட்டாரத்தில் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில், பிரதம மந்திரி நுண்ணீர் பாசனம் திட்டத்துக்கு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகளுக்கு, ஒரு எக்டருக்கு, 1 லட்சத்து, 35 ஆயிரத்து, 855 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, 220 எக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு, வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை