உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனியார் வாகனங்களில் அரசு பணி ஸ்டிக்கர் அதிகாரிகள் இன்றி இயக்கம்

தனியார் வாகனங்களில் அரசு பணி ஸ்டிக்கர் அதிகாரிகள் இன்றி இயக்கம்

பொள்ளாச்சி;தனியார் வாகனங்களை அரசு அதிகாரிகள் பயன்படுத்தாத நிலையிலும், 'அரசு பணி' அல்லது 'ஆன் டூட்டி' உள்ளிட்ட ஸ்டிக்கர்கள் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.பொள்ளாச்சி நகரில், அரசுத்துறைகளுக்கு தனித்தனியே வாகனங்கள் உள்ளன. இருப்பினும், பொதுப்பணித்துறை, வருவாய், மின்வாரியம் உள்ளிட்ட சில துறைகளில் அவசர கால பயன்பாட்டுக்கு கூடுதலாக வாகன தேவையாக உள்ளது.இதனால், சொந்த மற்றும் தனியார் வாகனங்கள், வாடகைக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாகனங்களை, அரசு அதிகாரிகள், பயன்படுத்துவதை தெரிவிக்கும் வகையில், 'அரசு பணி' அல்லது, 'ஆன் டூட்டி' என பேப்பரில் எழுதி முன் மற்றும் பின் கண்ணாடிகளில் ஒட்டப்படுகிறது.இத்தகைய வாகனங்கள், சில நேரங்களில், டாஸ்மாக் கடைகள், 'நோ பார்க்கிங்' உள்ளிட்ட பல பகுதிகளில் விதிமீறி நிறுத்தப்படுகிறது. அரசு அதிகாரிகள் பயணிக்காத நிலையிலும், 'ஆன் டூட்டி ஸ்டிக்கர்' பயன்படுத்துவதை சில வாகன ஓட்டுநர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். குற்றச்செயல்கள் அரங்கேற வாய்ப்புள்ளதால், விதிமீறலைக் கண்டறிந்து தடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது:அரசு அதிகாரிகள் தங்கள் சொந்த வாகனங்களை பணிக்கு பயன்படுத்தினாலும் அதில் 'அ', 'ஜி' ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது. அதேபோல, 'ஆன் டூட்டி' என, ஸ்டிக்கர் ஒட்டியும், அரசு அதிகாரிகள் இன்றி, விடுமுறை நாட்களில் வாகனங்கள் இயக்கப்படுகிறது. போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ