உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் தொழில்துறையினருடன் ம.பி., முதல்வர் நாளை சந்திப்பு

கோவையில் தொழில்துறையினருடன் ம.பி., முதல்வர் நாளை சந்திப்பு

கோவை : தமிழக தொழில்துறையினருக்கு, மத்திய பிரதேசத்தில் பல்வேறு சலுகைகளுடன், தொழில் துவங்க அழைப்பு விடுத்து, அம்மாநில முதல்வர் மோகன்யாதவ், கோவையில் நாளை தொழில்துறையினரை சந்திக்கிறார்.வடமாநில அரசுகள், தமிழகத்தில் உள்ள தொழிலை தங்கள் மாநிலத்தில் துவக்கி, வேலை வாய்ப்பு வழங்க முயற்சிக்கின்றன. தமிழகத்தில் மூலப்பொருள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என, பல்வேறு சவால்கள் எழுந்துள்ள நிலையில், தமிழக தொழில்துறையினரை மத்திய பிரதேசத்தில் தொழில் துவங்க வருமாறு, அம்மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது.ம.பி., மாநில குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலர் தலைமையிலான குழுவினர் கோவையில் முகாமிட்டு, தொழில்துறையினரை சந்தித்துள்ளனர். நாளை, அம்மாநில முதல்வர் மோகன் யாதவ், அனைத்து தொழில்துறையினரையும் நேரில் சந்தித்து கலந்துரையாடுகிறார்.இந்நிகழ்ச்சி, கோவை, லீ மெரிடியன் ஓட்டலில், காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. இதில், தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளை கேட்டறியும், முதல்வர் மோகன் யாதவ் அம்மாநிலத்தில் தொழில் துவங்குவதால் கிடைக்கும் சலுகைகள், அரசு திட்ட உதவிகள் குறித்து விரிவாக கூறுகிறார்.ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில், நுாற்பாலைகள், இன்ஜினியரிங் மற்றும் ஆட்டோமொபைல்ஸ், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், 'லகு உத்யோக் பாரதி' நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த யூனிட் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசவுள்ளார். இந்நிகழ்ச்சியில், பங்கேற்க https://invest.mp.gov.in/public-service/road_show/event_form இந்த இணைப்பில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை