உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் குழாயில் எலும்புகள் வந்த விவகாரம்: நகராட்சி கமிஷனர், தலைவர் நேரில் ஆய்வு

குடிநீர் குழாயில் எலும்புகள் வந்த விவகாரம்: நகராட்சி கமிஷனர், தலைவர் நேரில் ஆய்வு

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அருகே சாமப்பா லே அவுட் பகுதியில் குடிநீர் குழாயில் எலும்புகள், இறைச்சி எச்சங்கள் வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து நேற்று குடிநீர் குழாயை மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின், கமிஷனர் அமுதா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.மேட்டுப்பாளையம் நகராட்சி 21வது வார்டுக்குட்பட்டது சாமப்பா லே அவுட் பகுதி. இப்பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் இறைச்சி எச்சங்கள், முடிகள் போன்றவை குடிநீர் குழாயில் வந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். நேற்று அப்பகுதிக்கு சென்ற மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின், கமிஷனர் அமுதா மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவம் குறித்து ஆய்வு செய்தனர்.இதுகுறித்து நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின் கூறுகையில், ''மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட தண்ணீர் டேங்குகள் அனைத்தும் சரியான இடைவெளியில் சுத்தம் செய்யப்படுகின்றன. மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம். குடிநீர் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தான் விநியோகம் செய்யப்படுகின்றன,'' என்றார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா கூறியிருப்பதாவது:-மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு சாமப்பா லே அவுட் பகுதியில் சம்பந்தப்பட்ட மூன்று வீடுகளில் ஆய்வு செய்யப்பட்டதில், குடிநீர் அடைப்பு இருப்பது அறியப்பட்டு, அடைப்பு நீக்கப்பட்டது. மேலும், இந்த தெருவிலுள்ள 3 பிரதான குடிநீர் குழாய் சுத்தம் செய்யப்பட்டு இக்குழாயில் உள்ள மண், சிறிய கற்கள் அகற்றப்பட்ட பின் கடந்த 16ம் தேதி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதில், இப்பகுதிக்கு துாய்மையான குடிநீர் விநியோகிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.மேலும் இன்று(நேற்று)நகராட்சி தலைவர், கமிஷனர், பொறியாளர், கவுன்சிலர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் முன்னிலையில், பிரதான குழாய் மற்றும் வீடுகளில் உள்ள அனைத்து குடிநீர் குழாய்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்து, ஆய்வு செய்யப்பட்டு, அப்பகுதியிலுள்ள அனைத்து வீடுகளிலும் துாய்மையான குடிநீர் விநியோகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது. பொதுமக்கள் குடிநீர் குறித்த புகார்களை உடனுக்குடன் நகராட்சிக்கு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை