உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி சுகாதார துறை ரெடி

பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி சுகாதார துறை ரெடி

கோவை : பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும், தயார் நிலையில் வைத்திருப்பதாக மாநகராட்சி சுகாதார துறை தெரிவித்துள்ளது.கேரள மாநிலத்தின் மிக அருகாமையில் உள்ள கோவையில், அவ்வப்போது மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காய்ச்சல் முகாம்கள் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படுகின்றன. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மாநகராட்சி நகர் நல அலுவலர் பூபதி கூறியதாவது:மாநகராட்சியில், 800 டெங்கு தடுப்பு பணியாளர்கள் உள்ளனர். இவர்களில், 200 பேர் விரைவு குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மழை பெய்யும் நேரங்களில், விரைந்து செயல்பட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வர். மற்றவர்கள் தற்போது டெங்கு கொசு ஒழிப்பு, டெங்கு கொசு உற்பத்தி குறித்தான ஆய்வு, கொசு மருந்து, புகை அடித்தல், உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். மாநகராடசியின் அனைத்து பகுதிகளிலும், காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி