உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

கோவை : செல்வபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வெகு விமரிசையாக நடந்தது.செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டில் உள்ள, ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, நேற்றுமுன்தினம் விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, முதல் கால வேள்வி நடந்தது. நேற்று, இரண்டாம் கால வேள்வி பூஜையும், அதனைத்தொடர்ந்து, 7:00 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, அய்யனார் ஆதினம் ஸ்ரீனிவாச சுவாமிகள் தலைமையில், கோவில் விமானத்திற்கும், முத்துமாரி அம்மனுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின், முத்துமாரி அம்மனுக்கு மஹா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ