| ADDED : ஆக 14, 2024 09:00 PM
கோவை : நேருநகர், சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இந்திய நுாலகத்தின் தந்தையான ரங்கநாதனின் 129வது பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய டிஜிட்டல் நுாலகம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரியின் செயலாளர் மற்றும் இயக்குனர் சேகர் தலைமை வகித்தார்.கல்லுாரி முதல்வர் ராஜ்குமார், நுாலகம் மற்றும் புத்தக வாசிப்பு மாணவர்களின் வாழ்விற்கும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் எப்படி உறுதுணையாக இருக்கும் என்பதை எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியின் நுாலகர் பரமசிவம் கலந்துகொண்டார். அவர், மாணவர்கள் தேசிய டிஜிட்டல் நுாலகத்தில் எப்படி பதிவு செய்ய வேண்டும் என எடுத்துரைத்தார்.தமிழ்த்துறைத் தலைவர் சுந்தரமயில், வணிகவியல் துறை பேராசிரியர் தியாகராஜன், பேராசிரியர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.