உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய அளவிலான பைக் ரேஸ் ஆகாயத்தில் பறந்த வீரர்கள்

தேசிய அளவிலான பைக் ரேஸ் ஆகாயத்தில் பறந்த வீரர்கள்

கோவை:காட் ஸ்பீடு ரேஸிங் சார்பில், 'எம்.ஆர்.எப்., சூப்பர் கிராஸ் சாம்பியன்ஷிப்' தேசிய அளவிலான பைக் ரேஸ், அவிநாசி சாலை கொடிசியா மைதானத்தில் நடந்தது.இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, டி.வி.எஸ்., ஹீரோ, கே.டி.எம்., உள்ளிட்ட ஒன்பது நிறுவனங்களை சேர்ந்த, 80 வீரர்கள் வெவ்வேறு பிரிவுகளில் போட்டியிட்டனர். வீரர்களின் அனுபவத்திற்கு ஏற்ப, நோவீஸ், ஜூனியர், எக்ஸ்பர்ட் ஆகிய மூன்று பிரிவுகளில், போட்டிகள் நடத்தப்பட்டன.இதில், பல்வேறு வளைவுகளுடன் அமைக்கப்பட்டிருந்த டிராக்கில், வீரர்கள் சிறப்பாக வாகனங்களை இயக்கி, வெற்றி கோப்பையை வென்றனர்.சிறப்பாக செயல்பட்ட, கே.டி.எம்., ரேஸிங் அணியை சேர்ந்த ஸ்லோக் கோர்படே, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.கோவையை சேர்ந்த கரண் குமார், அபிஷேக், கேரள வீரர் ரியான் ஹால்க், கர்நாடகாவை சேர்ந்த அர்ஷத், மகாராஷ்டிராவின் யாஷ் சிண்டே, சைதன்யா ஜோஷி உள்ளிட்டோர் வெவ்வேறு பிரிவுகளில் கோப்பையை வென்றனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பரிசுகளை வழங்கினார். பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் அனுஷா உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை