உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய ரேஷன் கார்டு கிடைக்குமா? மாவட்ட வழங்கல் அலுவலர் பதில்

புதிய ரேஷன் கார்டு கிடைக்குமா? மாவட்ட வழங்கல் அலுவலர் பதில்

- நமது நிருபர் -கோவை மாவட்டத்தில், புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்த, பல ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் இன்னும் பரிசீலனை செய்யப்படாமல் உள்ளன.ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க மட்டுமின்றி, அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெறவும், ரேஷன் கார்டு முக்கியமான ஆவணமாக உள்ளது.அதனால், தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வேண்டி, விண்ணப்பித்து இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் காத்திருக்கின்றனர். கோவை மாவட்டத்தில் இருந்து, 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, இதுவரை ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. ரேஷன் கார்டு இல்லாததால், பல பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை.இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் புதிய கார்டு வழங்கப்படும் என, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் முடிந்த பின் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.தமிழகத்தில் தேர்தல் முடிந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும், இன்னும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. விண்ணப்பித்தவர்கள் வட்டார வழங்கல் அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர்.கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இன்னும் அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல் உள்ளன. புதிய ரேஷன் கார்டு வழங்குவது குறித்து, அரசு தரப்பில் எந்த உத்தரவும் வரவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி