UPDATED : மார் 22, 2024 12:06 PM | ADDED : மார் 22, 2024 12:06 AM
கோவை:கோவை மாநகராட்சிக்கு புதிய நகர் நல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.கோவை மாநகராட்சி நகர் நல அலுவலர் பணியிடம் ஐந்து மாதங்களுக்கும் மேலாக காலியாக இருந்தது. இதையடுத்து, உதவி நகர் நல அலுவலர் வசந்த் திவாகர், கூடுதலாக நகர் நல அலுவலர் பணியிடத்தை கவனித்து வந்தார்.இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சியில் கடந்த 2016 முதல் 2020ம் ஆண்டு வரையும், மதுரையில் கடந்த ஆறு மாதங்களாகவும் நகர் நல அலுவலராக பணிபுரிந்த பூபதி, கோவை மாநகராட்சியின் புதிய நகர் நல அலுவலராக தற்போது பொறுப்பேற்றுள்ளார். இடைப்பட்ட காலத்தில் இவர் மருத்துவ மேற்படிப்பு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.