மேலும் செய்திகள்
இணையதளம் முடக்கம்; சான்றிதழ் பெற முடியாமல் அவதி
7 hour(s) ago
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
7 hour(s) ago
தேசிய நூலக வார விழா
7 hour(s) ago
டிப்பர் லாரி மோதி சாய்ந்தது மின் கம்பம்
7 hour(s) ago
கோவை : சுதந்திரதினநாளான நேற்று விடுமுறை வழங்காமல் இயங்கிய 191 கடைகள், உணவு நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அரசுவிடுமுறை நாளான நேற்று தொழிலாளர் ஆய்வர்களிடம் உரிய படிவத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும் அல்லது தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.இதை தவிர்த்து எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கோவையில் 92 கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருந்தன. அதே போல் 99 உணவு நிறுவனங்கள் செயல்பட்டன.தொழிலாளர் உதவி கமிஷனர் காயத்ரி தலைமையில் அனைத்து தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது 191 நிறுவனங்கள் செயல்படுவது தெரிந்தது. இதையடுத்து அந்நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது குறித்து தொழிலாளர் துறை அதிகாரிகள் கூறுகையில், ''சுதந்திர தினநாளில் திறக்கப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு 500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவனங்கள் அடுத்த மாதம் ஆய்வு செய்யப்பட்டு உரிய மாற்று விடுப்போ அல்லது இரட்டிப்பு ஊதியமோ வழங்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago