மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
7 hour(s) ago
நாளைய மின்தடை
7 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
7 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
7 hour(s) ago
கோவை:ஓட்டுச்சாவடிகளில் வரிசையில் நிற்க முடியாமல், முதியவர்கள் பலர் அவஸ்தைப்பட்டனர்.கோவை லோக்சபா தொகுதியில், நேற்று விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. புலியகுளம், பழையூர்,பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த ஓட்டுச்சாவடிகளில் காலை, 8:00 மணியில் இருந்து நீண்ட வரிசையில் நின்று, வாக்காளர்கள் தங்களின் ஓட்டுகளை செலுத்தினர். காலை 9:00 முதல் 12:00 மணி வரை, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. புலியகுளம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் அமைக்கப்பட்டு இருந்த, 10ம் நம்பர் ஓட்டுச்சாவடியில், கூட்டம் அதிகமாக இருந்தது.ஓட்டுச்சாவடிக்கு வெளியே, வெயிலில் வரிசையில் அதிக நேரம் வாக்காளர்கள் காத்திருந்தனர். முதியவர்கள் பலர் வரிசையில் நிற்க முடியாமல் அவஸ்தைப்பட்டனர். அவர்களுக்கு ஓட்டுப்போட, வரிசையில் முன்னுரிமை அளித்திருக்க வேண்டும் என்பதே, அவர்களின் ஆதங்கமாக இருந்தது.வரிசையில் நின்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் கூறுகையில், ''வரிசை நகரவே மட்டேங்குது. இந்த வெயிலுல எம்புட்டு நேரம் தான் நிக்கிறது. மயக்கமா வருது,'' என்றார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago