உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கர்ப்பப்பை புற்றுநோய்க்கு உடல் பருமன் காரணம்

கர்ப்பப்பை புற்றுநோய்க்கு உடல் பருமன் காரணம்

'உடல் பருமன் பிரச்னையால் பெண்களுக்கு, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுகிறது,' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவ மனை மகப்பேறு சார்ந்த புற்றுநோய் பிரிவு டாக்டர் அன்புக்கனி சுப்பையன்.அவர் கூறியதாவது:கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இரண்டுமே கர்ப்பப்பையில் ஏற்படுகின்றன. கர்ப்பப்பையின் உட்புறம் உள்ள எண்டோமெட்ரியம் என்ற மெல்லிய திசுப்படலத்தில் ஏற்படுவது கர்ப்பப்பை புற்றுநோய். கர்ப்பப்பையின் கீழ்பகுதியில் உள்ள வாய் போன்ற பகுதியில் ஏற்படுவது கர்ப்பப்பை வாய் புற்றுநோய்.கர்ப்பப்பையின் வாய் பகுதியில் எச்.பி.வி., என்ற ஹியூமன் பாபிலோமா வைரஸ் தொற்றால் புற்றுநோய் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது இது தீவிரமாகும். பரிசோதனை மற்றும் தடுப்பூசி வாயிலாக இதை தடுக்கலாம்.உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு அதிகமானால் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் பருமன் மற்றும் சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த ஹார்மோன் பிரச்னை ஏற்படலாம்.உடல் பருமன் பிரச்னை உள்ளவர்களின் உடலில் அதிகமாக சேரும் கொழுப்பு, அவர்களின் உடலில் ஹார்மோன் சமநிலையை மாற்றி புற்றுநோயாக உருவெடுக்கிறது. மிக இளம் வயதிலேயே மாதவிடாய் துவங்குபவர்களும், மிக தாமதமாக இறுதி மாதவிடாயை சந்தித்தவர்களுக்கும் இப்பிரச்னை ஏற்படவாய்ப்புள்ளது; தாய்மைப்பேறு அடையாதவர்களுக்கும் இந்த அபாயம் உள்ளது.இவற்றில் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய்க்கு, 9 முதல் 26 வயதுக்குள் தடுப்பூசி போடவேண்டும். கர்ப்பப்பை புற்றுநோய்க்கு தடுப்பூசி இல்லை. அதிக உடல் எடையை தடுத்தாலே போதும் பல நோய்களை தவிர்க்கலாம்.மாதவிடாய் தள்ளிப்போனால், அலட்சியப் படுத்தாமல் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே இவற்றை கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்றால், எளிதில் குணப்படுத்தலாம். லேப்ராஸ்கோபி மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் வாயிலாக கே.எம்.சி.எச்.,ல் கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு, 74188 87411 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ