உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தண்ணீர் தொட்டிகளில் துாய்மை பணி அதிகாரிகள் உறுதி செய்யணும்

தண்ணீர் தொட்டிகளில் துாய்மை பணி அதிகாரிகள் உறுதி செய்யணும்

பொள்ளாச்சி;உள்ளாட்சி அமைப்புகளில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை குறிப்பிட்ட நாள் இடைவெளியில் சுத்தம் செய்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும், என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சி தாலுகாவில், பருவமழையின் தாக்கம் உள்ளது. இதனால், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு வினியோகிக்கும் குடிநீரில், 2 முதல், 5 பி.பி.எம்., அளவில் குளோரின் இருக்க வேண்டும்.மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை, குறிப்பிட்ட நாள் இடைவெளியில் சுத்தம் செய்யவும், குடிநீர் வினியோக குழாய்களில் ஏற்படும் உடைப்பு மற்றும் கசிவுகளை உடனுக்குடன் சரி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இருப்பினும், சில உள்ளாட்சி அமைப்புகளில் மேல்நிலைத் தொட்டிகளில் துாய்மை பணி, தொய்வு நிலையில் இருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது:மனிதர்களுக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்கள், தண்ணீர் வாயிலாகவே பரவுகிறது. உள்ளாட்சி அமைப்புகள் தோறும், மக்கள் தொகைக்கு ஏற்ப மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் அமைத்து, அதற்கேற்ப குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.மாசடைந்த தண்ணீரால், மஞ்சள் காமாலை ஏற்படுத்தும் 'ரல் ஹெப்படைடிஸ் -ஏ மற்றும் 'இ' வைரஸ்; குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும் 'ரோட்டோ வைரஸ்'; வயிற்றுப்போக்கு மற்றும் காலரா உருவாக்கும் 'ஈக்கோலைஸ்' மற்றும் 'சால்மோனால் டைபி' பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புள்ளது.அதன் காரணமாகவே, தண்ணீரில் உள்ள வைரஸ், பாக்டீரியா மற்றும் புழுக்களும் அழிக்க குறிப்பிட்ட அளவில் குளோரின் கலக்கப்படுகிறது. இப்பணியை மேற்கொள்வதற்காகவே உள்ளாட்சி அமைப்புகளில் தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதேநேரம், சில பகுதிகளில் கலங்கிய தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த தண்ணீரை, மக்கள் வடிகட்டி பயன்படுத்துகின்றனர். எனவே, அவ்வப்போது, மேல்நிலைத் தொட்டிகள் சுத்தம் செய்யப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை