மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
4 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
4 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
4 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
4 hour(s) ago
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, வால்பாறை வனச்சரகம் அய்யர்பாடி பிரிவு கவர்க்கல் சுற்றுக்கு உட்பட்ட நெடுங்குன்று பழங்குடியின பகுதியை சேர்ந்த ரவி, 54. இவர், நேற்றுமுன்தினம் இரவு, 9:15 மணிக்கு குடியிருப்புக்கு சென்று கொண்டு இருந்த போது, எதிர்பாராதவிதமாக அவ்வழியாக குட்டியுடன் வந்த காட்டு யானை தாக்கியது. அதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து, தகவல் அறிந்த வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.வனத்துறையினர் கூறுகையில், 'மூன்று பேர் வீட்டுக்கு செல்லும் போது, யானை தாக்கியதில் ரவி இறந்தார்; விஜயன், 52, ராமச்சந்திரன், 37 ஆகியோர் காட்டு யானையை கண்டு பயந்து ஓடிய போது காயமடைந்தனர். அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இறந்தவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.மேலும், வனத்துறை சார்பில், காயமடைந்த இருவருக்கும் தலா, 5,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது. இறந்த ரவி குடும்பத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது,' என்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago