உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன விபத்தில் ஒருவர் பலி

வாகன விபத்தில் ஒருவர் பலி

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் இறந்தார்.பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள் பைஜூல் ரகுமான், 23, மற்றும் நசிபுதீன். இவர்கள் இருவரும் சொந்த வேலைக்காக, பொள்ளாச்சியில் இருந்து சுந்தராபுரத்துக்கு பைக்கில் சென்றனர். பைக்கை பைஜுல் ரகுமான் ஓட்டினார். வேலை முடிந்து பொள்ளாச்சி திரும்பும் போது, கிணத்துக்கடவு மேம்பாலம் இறங்கும் இடத்தில், பைக் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளானது.இதில், படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பைஜூல் ரகுமானை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டலாக தெரிவித்தார். நசிபுதீன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ