உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முன் விரோதம் :ஒருவர் கொலை ;ஒருவர் கைது

முன் விரோதம் :ஒருவர் கொலை ;ஒருவர் கைது

கூடலுார்;நீலகிரி மாவட்டம், முதுமலை, மசினகுடி தொட்டலிங்கி பகுதி சேர்ந்தவர் பிரவீன்,25. இவர் ஊட்டியில் தனியார் விடுதியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், மசினகுடி பகுதியில், தலையில் காயத்துடன் அவர் இறந்து கிடந்தார். மசினகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பரத்,21, என்பவர் பிரவீனை கோடாரியால் தலையில் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.போலீஸ் விசாரணையில், 'அவர்கள் உறவினர் என்பதும்; முன் விரோதம் காரணமாக பிரவீனை, பரத் கொலை செய்தார்,' என்பதும் தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை