| ADDED : ஜூலை 09, 2024 12:31 AM
வால்பாறை;வால்பாறை அரசு கலை மற்றும் அறியவில் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுகக்கூட்டம் நடந்தது.வால்பாறை அரசு கலை மற்றும் அறியவில் கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுகக்கூட்டம் கல்லுாரி கலையரங்கில் நடந்தது. கூட்டத்தில், முதல்வர் சிவசுப்ரமணியம் பேசியதாவது:மாணவர்கள், கல்லுாரிக்கு குறிப்பிட்ட நேரத்தில் வர வேண்டும். தேவையில்லாமல் விடுப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டும். கல்லுாரி விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தவில்லை என்றால், நேரில் புகார் தெரிவிக்கலாம். கற்கும் கல்வியால் மட்டுமே மாணவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையமுடியும் என்பதை உணர்ந்து, மாணவர்கள் திறம்பட படிக்க வேண்டும். இவ்வாறு, பேசினார்.வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் பேசுகையில், ''கல்லுாரியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் படும் கஷ்டத்தை உணர்ந்து சிறந்த முறையில் படிக்க வேண்டும்.படிக்கும் வயதில் மாணவர்கள் தவறான பாதையில் செல்லக்கூடாது. குறிப்பாக, போதை பொருட்களை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது,' என்றார். கூட்டத்தில், கல்லுாரி பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.