| ADDED : ஆக 19, 2024 01:14 AM
குன்னுார்:குன்னுார் காட்டேரி பூங்காவில் இரண்டாவது சீசனுக்காக அலங்கார செடிகள் நடவு பணி துவங்கியுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள காட்டேரி பூங்காவை சுற்றி பசுமை நிறைந்த தேயிலை தோட்டம், மலைகள், நீர்வீழ்ச்சி, ரன்னிமேடு ரயில் நிலையம் காணப்படுகிறது. இந்த இயற்கை சூழல் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அக்., நவ., மாதங்களில், 2வது சீசன் நடக்க உள்ளதால், பாத்திகளில் நாற்று நடவு பணி துவக்கப்பட்டுள்ளது.முன்னதாக, பூங்காவில், 'ஐரிஸ் குளோரோபைட், பொன்னாங்கண்ணி, டேபிள் ரோஸ்,' உள்ளிட்ட அலங்கார செடி நாற்றுகளை நடவு செய்யும் பணி துவங்கியுள்ளது. இந்த அலங்கார செடிகளை கொண்டு, புதிதாக பல்வேறு வடிவமைப்புகளை ஏற்படுத்த தோட்டக்கலை துறையினர் முடிவு செய்துள்ளனர்.