உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இடியும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி

இடியும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி

பெ.நா.பாளையம்;துடியலூர் அருகே அசோகபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஒன்றாவது வார்டில், இடியும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.துடியலூர் அருகே அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டு, காந்தி காலனி மேற்கு பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. கடந்த, 2005ம் ஆண்டு கட்டப்பட்ட குடிநீர் தொட்டியின், 4 கான்கிரீட் தூண்களும், இடிந்த நிலையில் உள்ளது. தொட்டியின் அடிப்பகுதியில் பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவில் இருக்கும் இத்தொட்டியை இடித்து விட்டு, புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டி தருமாறு, அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம் கூறுகையில், கடந்த ஆண்டு ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, இடித்து அப்புறப்படுத்த, 80 ஆயிரம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டங்களிலும், பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். ஊராட்சி நிர்வாகம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேல்நிலைத் தொட்டி கீழே விழுந்து, அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்னர், பாதுகாப்பாக தண்ணீர் தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ