திருநங்கைகள் பற்றிய சமூகத்தின் பார்வை தற்போது மாறி வருகிறது. பல்வேறு துறைகளில் அவர்கள் சாதித்து வருகின்றனர்.அந்த வரிசையில் பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து, தனக்கென தனி பாதையை உருவாக்கி சிறந்த சமூக ஆர்வலர், ஓவியர், சினிமா நடிகை, கவிஞர், எழுத்தாளர், தொழில் முனைவர், கல்வி ஆர்வலர், திருநங்கை ஆர்வலர் என பன்முகங்களை கொண்டவராக திகழ்பவர்தான், கோவையைச் சேர்ந்த திருநங்கை கல்கி சுப்பிரமணியம்.இவர், கோவை வானவில் கூட்டமைப்புடன் இணைந்து, ஓவிய கண்காட்சியை ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடத்தினார்.கண்காட்சி குறித்து கல்கி சுப்பிரமணியம் கூறியதாவது:சகோதரி பவுண்டேஷன் மற்றும் கோவை வானவில் கூட்டமைப்பு இணைந்து லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம் மற்றும் திருநங்கை குறித்த ஓவிய கண்காட்சியை நடத்துகிறோம்.ஒவ்வொரு ஓவியமும் திருநங்கையரின் காதல், சோகம், வஞ்சனை, சுதந்திரமாக வாழ்வது, பொது வெளியில் தைரியமாக வாழ்வது ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.இதன் வாயிலாக, நாங்களும் சாதாரண மனிதர்கள் தான் என்பதை உணர்த்தும். சமூக அங்கீகாரம், குடும்ப அங்கீகாரம், சட்ட அங்கீகாரம் எங்களுக்கு வேன்டும்.கோவை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் போல, சமையல் கலையில் சிறந்தவர்கள் வேறு எங்கும் இல்லை. 100 டன் வரை பிரியாணி சமைப்பதற்கு கோவை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் அதிதிறன் கொண்டவர்கள்.சில திருநங்கைகள் பொருளாதார பிரச்னைகளால், வழி தவறி சென்று விடுகின்றனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்ல வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்.மாநில அரசு ரூ-.50 ஆயிரம் மானியம் வழங்கி வருகிறது. அவர்களை தொழில் முனைவோர்களாக்க பல திட்டங்கள், பயிற்சிகளை அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு, கல்கி சுப்ரமணியம் கூறினார்.சில திருநங்கைகள் பொருளாதார பிரச்னைகளால், வழி தவறி சென்று விடுகின்றனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்ல வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். மாநில அரசு ரூ-.50 ஆயிரம் மானியம் வழங்கி வருகிறது. அவர்களை தொழில் முனைவோர்களாக்க பல திட்டங்கள், பயிற்சிகளை அரசு வழங்க வேண்டும்.