உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சக்தி பீடத்தில் பங்குனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு

சக்தி பீடத்தில் பங்குனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு

கோவை;கோவை காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடத்தில் குழந்தை வரம் தரும் பேச்சி பெரியநாயகி அம்மனுக்கு, சிறப்பு வழிபாடு நடந்தது.ஒண்டிப்புதுார் அருகே, 51 சக்தி பீடம் கோவிலில், அங்காள பரமேஸ்வரி அன்னை, முப்பெரும் தேவியர், விநாயகர், சிவன், முருகன், பாரதமாதா உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு, குழந்தை வரம் தரும் பேச்சி பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. பெண்கள் ஏராளமானோர், புத்திர பாக்கியம் வேண்டி அம்மனை தரிசனம் செய்தனர். நிறைவில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை