உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பண்ணாரி அம்மன் கல்லுாரிக்கு தேசிய போட்டியில் முதலிடம்

பண்ணாரி அம்மன் கல்லுாரிக்கு தேசிய போட்டியில் முதலிடம்

கோவை;பர்பஸ் அறக்கட்டளை, தேசியளவில் தொழில் முனைவோருக்கான தேடல் நிகழ்வை நடத்தியது.புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த போட்டியின், முதல் கட்ட இறுதிப்போட்டி, சென்னை அண்ணா பல்கலையில் நடந்தது.முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு, ரொக்கப் பரிசுகள் மற்றும் அவர்களின் விளக்கக் காட்சிகளுக்கு, சிறப்பு அங்கீகாரமும் வழங்கப்பட்டது.இதில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரியின் டீம் எனர்ஜி அணியை சேர்ந்த ஹேமா, பிரணவ் ஆதித்யா ஆகியோர் உருவாக்கிய,'பிரெசிசன் அக்ரிகல்ச்சர் பார் ஜீரோஹங்கர்' என்ற கண்டுபிடிப்பு, முதல் இடத்தைப் பெற்றது.மாணவர்களின் கண்டு பிடிப்பு, பண்ணை விவசாயிகள் தங்கள் விவசாயத்தில் நிகர லாபத்தை அதிகரிக்க உதவும்,தேர்ச்சி திறன் வாய்ந்த துல்லியமான செயலியாகும்.முதல் பரிசை பெற்ற மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு, ரூ.ஒரு லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை