| ADDED : மார் 29, 2024 12:38 AM
கோவை:விசாகப்பட்டினத்தில் நடந்த பயோ மெடிக்கல் ஹேக்கத்தான் போட்டியில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரி அணியினர் முதல் பரிசு வென்றனர்.விசாகப்பட்டினத்தில் உள்ள காந்தி தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் (ஜி.ஐ.டி.ஏ.எம்.,) ஸ்கூல் ஆப் டெக்னாலஜி, மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், முதன்மை மற்றும் துவக்க பயோமெடிக்கல் டிவைஸ் டிசைன் ஹேக்கத்தான் நடந்தது. பயோ மெடிக்கல் துறையில் சுகாதாரப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ஹேக்கத்தான் போட்டி நடந்தது.போட்டியில் பங்கேற்ற பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரியின் பயோமெடிக்கல் சிஸ்டம்ஸ் ஆய்வகம் மற்றும் எம்பட்டெட் தொழில்நுட்ப ஆய்வகத்தை சேர்ந்த ஸ்ரேயா, பிரகதீஸ், ஜமீர் அலி ஆகியோரின் ஸ்டார்க்ஸ் அணி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கான கண்காணிப்பு சாதனத்தை உருவாக்கி முதலிடம் பிடித்தனர்.