உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலுார் குழந்தைக்கு அரிய நோய் சிகிச்சைக்கு உதவ பெற்றோர் மனு

சூலுார் குழந்தைக்கு அரிய நோய் சிகிச்சைக்கு உதவ பெற்றோர் மனு

கோவை;சூலுாரை சேர்ந்த தம்பதியர், தங்கள் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள, 'ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி' நோய்க்கு சிகிச்சை மேற்கொள்ள, கலெக்டரிடம் உதவி கேட்டனர்.சூலூரை சேர்ந்த சுரேஷ்குமார் - நித்யா தேவி தம்பதியரின் இரண்டு வயது குழந்தையால், இன்னும் எழுந்து நடக்க முடியவில்லை. மரபணு சோதனை முடிவில், ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி (முதுகெலும்பு தசை சிதைவு நோய்) இருப்பது கண்டறியப்பட்டது.இந்நோய் மிக அரிதானது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. பெங்களூரு பாப்டிஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்திலிருந்து மருந்து இறக்குமதி செய்து சிகிச்சை அளிப்பதாக, டாக்டர்கள் கூறுகின்றனர்.இச்சிகிச்சைக்கு சுமார், 16 கோடி ரூபாய் தேவைப்படும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இத்தொகை எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது. எனவே அரசு உதவ வேண்டும்.இவ்வாறு, பெற்றோர் தெரிவித்தனர்.உதவ விரும்பும் நல்லுள்ளம் படைத்தோர், 97883 56356, 86680 99910 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை