உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நுாலகத்தில் வீணாகும் நுால்கள் பாதுகாக்க மக்கள் வேண்டுகோள்

நுாலகத்தில் வீணாகும் நுால்கள் பாதுகாக்க மக்கள் வேண்டுகோள்

உடுமலை;உடுமலை அருகே, ஊர்ப்புற நுாலகத்தில், இட வசதி பற்றாக்குறையால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதோடு, நுால்கள் மூட்டை கட்டி வைக்கப்பட்டு வீணாகி வருகிறது.உடுமலை ஒன்றியம்,பெரியகோட்டை ஊராட்சியில், நகராட்சி குப்பைக்கிடங்கு அருகே, ஊர்ப்புற நுாலகம் அமைந்துள்ளது. தினமும், நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.நுாலகம் அமைந்துள்ள கட்டடம் குறுகியதாக உள்ளதால், பொதுமக்கள், குழந்தைகள் நுாலகத்தில் அமர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது.மேலும், நுாலகத்திற்கு வாங்கப்பட்ட பல்வேறு துறை சார்ந்த நுால்கள், அடுக்கி வைத்து பொதுமக்கள் படிப்பதற்கு வழங்காமல், மூட்டை கட்டி வீணாக வைக்கப்பட்டுள்ளது.எனவே, ஊர்ப்புற நுாலகத்தை விரிவாக்கம் செய்யவும், நுால்களை பயன்படுத்தும் வகையில் அடுக்கி வைத்து, பாதுகாக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில், 'ஊர்ப்புற நுாலகம் இட வசதி பற்றாக்குறை உள்ளதால், பழைய ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ