உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் வலியுறுத்தல்

சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் வலியுறுத்தல்

தொண்டாமுத்தூர்;அட்டுக்கல்லில், வனப்பகுதியையொட்டி மாடு மேய்க்கும் பகுதியில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், கூண்டு வைத்து பிடித்து, அடர் வனப்பகுதிக்குள் விட வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கோவை வனச்சரகத்திற்குட்பட்ட அட்டுக்கல், கெம்பனூர் பகுதியில், கடந்த சில நாட்களாகவே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த, இரு நாட்களுக்கு முன், விவேகானந்தன் என்பவரின் தோட்டத்தில் இருந்த இளம் கன்றுக்குட்டியை, சிறுத்தை கடித்து கொன்றது.ஆவேசமடைந்த விவசாயிகள், வனத்துறையினரின் வாகனத்தை சிறைபிடித்தனர். அதன்பின், வனத்துறையினர், போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய பின் வாகனத்தை விவசாயிகள் விடுவித்தனர். அதனைத்தொடர்ந்து, அப்பகுதியில், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்தியுள்ளனர்.இந்நிலையில், நேற்று கெம்பனூரை சேர்ந்தவர்கள் சிலர், அட்டுக்கல் வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, சிறுத்தை வனப்பகுதியை விட்டு வெளியேறி, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த பகுதிக்கு வந்துள்ளது.இதனைக்கண்ட மக்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனால், சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதுகாப்பில்லாத நிலை உருவாகியுள்ளதால், சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து, அடர் வனப்பகுதிக்குள் விட வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை