உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏ.டி.எம்., அமைக்க மக்கள் கோரிக்கை

ஏ.டி.எம்., அமைக்க மக்கள் கோரிக்கை

வால்பாறை : வால்பாறையில் இருந்து, 28 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது சோலையாறுடேம். இந்த பகுதியை சுற்றி, முருகாளி, ேஷக்கல்முடி, புதுக்காடு, கல்யாணப்பந்தல், பன்னிமேடு, சேடல்டேம், இடதுகரை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனர்.சோலையாறு அணையை காண, சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இங்கு ஏ.டி.எம்., மையம் இல்லாததால், வால்பாறை நகருக்கு தான் மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சோலையாறு அணைப்பகுதியில், வங்கிகள் சார்பில் ஏ.டி.எம்., மையம் அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை