உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதை பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி

போதை பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி

- நிருபர் குழு -உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், போதைபழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்து, போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விளக்கமளித்தார். தொடர்ந்து மாணவர்கள் போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி எடுத்தனர். அனைத்துத்துறை பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்களும் பங்கேற்றனர்.குருவப்பநாயக்கனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் சந்திரசேகர் தலைமையிலும், ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளிலும் மாணவர்கள் பள்ளி நிர்வாகத்தினர் தலைமையில், போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி எடுத்தனர்.

விழிப்புணர்வு பேரணி

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, போலீஸ் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு முதல்வர் சிவசுப்ரமணியன் தலைமை வகித்தார்.அதன்பின், கல்லுாரி வளாகத்தில் நடந்த விழிப்புணர்வு பேரணியை இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் துவக்கி வைத்தார். கல்லுாரி நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள், காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் வரை பேரணியாக சென்று, போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர். போதை பொருளுக்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் பழனி, கல்லுாரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ