உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸ் குறைதீர் முகாம்; 79 மனுக்களுக்கு தீர்வு

போலீஸ் குறைதீர் முகாம்; 79 மனுக்களுக்கு தீர்வு

கோவை : மாவட்ட போலீஸ் சார்பில் நடத்தப்பட்ட குறைதீர்ப்பு முகாமில், 79 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.கோவை மாவட்ட போலீஸ் சார்பில், பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது சமரச நடவடிக்கை எடுக்கும் நோக்கில், குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, நேற்று மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், குறைதீர்ப்பு முகாம் நடந்தது.இம்முகாமில், 79 மனுக்கள் மீது விசாரணை, மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒரு மனு மீது எப்.ஐ.ஆர்., 2 மனுக்கள் மீது சி.எஸ்.ஆர்., 67 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. 9 மனுக்கள் மீது, மேல் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.குறைதீர்ப்பு முகாமுக்கு, மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ