உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்

ஆனைமலை அருகே பேக்கரியில், வெளிமாநில மதுபானம் விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.ஆனைமலையை சேர்ந்த ராஜேஷ், 39; பேக்கரி நடத்தி வருகிறார். இவரும், வேட்டைக்காரன்புதுாரை சேர்ந்த செந்தில்குமார், 39 ஆகியோர் கர்நாடக மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்வதாக ஆனைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில், பேக்கரியில் சென்று சோதனையிட்டதில் மொத்தம், 67 கர்நாடகா மதுபாட்டில்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

வாகன விபத்தில் இருவர் பலி

திருச்செங்கோடு பகுதியைச்சேர்ந்தவர் ரங்கசாமி, 65. இவர் தனது மகனை பார்க்க கோவில்பாளையம் வந்தார். மேலும், கடைக்குச்சென்று வருவதாக கூறிவிட்டு, தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக ஆசிக் அகமது என்பவர் ஓட்டி வந்த கார், ரங்கசாமி மீது மோதியது. அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாயிலாக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.* கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுபுதுரைச்சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 32. இவர் தனது நண்பரை பார்க்க தாமரைக்குளம் சென்றார். அப்போது ரோட்டில் நடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத பைக் மோதியது.இதில், காயம் அடைந்த பாலகிருஷ்ணனை, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில், சிகிச்சை பலனளிக்காமல் பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திவிட்டு சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை