உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சிகளில் தேங்கும் குப்பையால் பாதிப்பு திடக்கழிவு மேலாண்மையில் சுணக்கம்

ஊராட்சிகளில் தேங்கும் குப்பையால் பாதிப்பு திடக்கழிவு மேலாண்மையில் சுணக்கம்

பொள்ளாச்சி':ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி, பொதுஇடங்களில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராம ஊராட்சிகளில் சுகாதாரத்தை மேம்படுத்த, குப்பையை தரம் பிரித்து கையாளும் வகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, மக்கள்தொகைக்கு ஏற்ப, துாய்மைப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வீடு வீடாகச்சென்று குப்பையை சேகரித்து, அதனை மக்கும், மக்காத குப்பை என தனித்தனியாக பிரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது.வீடுகள் மற்றும் உணவங்களில் இருந்து பெறப்படும் காய்கறி, உணவு உள்ளிட்ட மக்கும் கழிவுகளை கொண்டு, உரம் தயாரித்து விற்பனையும் செய்யப்பட்டன. ஆனால், தற்போது, குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை பெரும்பாலான ஊராட்சிகள் செயல்படுத்துவதில்லை.இதனால், கிராமங்களில் ஆங்காங்கே மலைபோல் குப்பை குவிந்து கிடக்கிறது. சுகாதாரம் பாதிப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.மக்கள் கூறியதாவது:ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பை, வழக்கம் போல், பொது இடங்கள், குளம், குட்டைகள், ரோட்டோரம், மயான பகுதி மற்றும் ஊராட்சி எல்லைக்கு வெளியில் உள்ள பகுதிகளில் மலைபோல் குவிக்கப்பட்டு வருகிறது.இதனால், துர்நாற்றமும், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. மேலும், குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால், காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவும், சேகரிக்கப்படும் குப்பையை உரமாக மாற்றப்படுவதை உறுதி செய்ய துறை ரீதியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை