உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனவளக்கலை யோகா பயிற்சி

மனவளக்கலை யோகா பயிற்சி

அன்னுார்:அன்னூரில் மனவளக்கலையின், 12 நாள் யோகா வகுப்பு மே 1ம் தேதி துவங்குகிறது. 'வாழ்க வளமுடன்' அமைப்பின் நிறுவனர் வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த, 'ஸ்கை' யோகா வகுப்பு, அன்னுார் அ.மு. காலனியில் உள்ள மனவளக்கலை மன்றத்தில் மே 1ல் துவங்குகிறது. இதில் 14 வயதுக்கு மேற்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம். தினமும், மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை, 12 நாட்கள் பயிற்சி நடைபெறும். மூச்சுப் பயிற்சி, தியானம், தவம், எளிய முறை உடற்பயிற்சி கற்பிக்கப்படும். பங்கேற்க விரும்புவோர், 97899 88949 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்